தமிழ் சினிமாவில் எப்படி விஜய் ரசிகர்களின் மனம் கவர்ந்த டாப் ஹீரோவாக இருந்து வருகிறாரோ அப்படித்தான் தெலுங்கு சினிமாவில் அல்லு அர்ஜுன்.
இவர் தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்தது மட்டுமே இல்லாமல் ஒவ்வொரு திரைப்படத்திலும் சிறந்த நடிப்பு, நடனம் உள்ளிட்ட அனைத்தையும் வெளிப்படுத்தி ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகராக பார்க்க்கப்பட்டு வருகிறார்.
தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் புஷ்பா2. ஏற்கனவே படத்தின் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று மாபெரும் வசூலிட்டி சாதனை படைத்து .
இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிக அளவில் அதிகரித்தது. இதனால் புஷ்பா படுத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.
இப்படத்தின் முதல் பாகம் ரூ.500 கோடி வரை வசூலிட்டி மாபெரும் சாதனை ஈட்டியது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் சமந்தா ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா பாடலுக்கு ஐட்டம் நடனம் ஆடி இருந்தது படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது.
மேலும் பல கோடி வசூல் ஈட்ட சமந்த காரணமாக அமைந்தார். இதனால் புஷ்பா படத்தில் சமந்தாவின் ஐட்டம் நடனம் மிக முக்கிய காரணமாகவும் அதன் வெற்றிக்கு அமைத்தது.
அதன்படி புஷ்பா 2 இரண்டாம் பாகத்திலும் சமந்தாவை ஐட்டம் நடனம் ஆட வைக்க பட குழு அணுகியுள்ளது. ஆனால்,சமந்தா அதற்கு முடியாது எனக்கூறி மறுத்துவிட்டாராம்.
Also Read : மருமகனை பட்டாசு வெடித்து வரவேற்ற சரத்குமார் – களைகட்டிய வரலக்ஷ்மியின் தல தீபாவளி!
சமந்தா நடனமாட மறுத்ததை தொடர்ந்து பிரபல நடிகையாகவும் இளைஞர்களின் சென்சேஷனல் ஹீரோயின் ஆகும் இருந்து வரும் ஸ்ரீ லீலாதான் புஷ்பா 2 திரைப்படத்திற்கு ஐட்டம் நடனம் ஆடி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் ஸ்ரீலீலா சமந்தாவை காட்டிலும் மிகச் சிறப்பாக ஆடியிருப்பார் என்பது பலரது எதிர்பார்ப்பாகவே இருக்கிறது.
காரணம் முன்னதாக மகேஷ்பாபு நடிப்பில் வெளிவந்த குண்டூர் காரம் திரைப்படத்தில் ஸ்ரீலிலா Kurchi Madathapetti பாடலுக்கு வெறித்தனமான ஆட்டம் போட்டு உலகம் முழுக்க ஃபேமஸ் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது .
இதனால் சமத்தா போனால் என்ன? ஸ்ரீ லீலா சிறப்பா சம்பவம் செய்திருப்பார் என புஷ்பா 2 படத்தின் நடனத்திற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.