சமந்தா;
முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா தெலுங்கு சினிமாவில் பிரபல இளம் நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த காதல் திருமணம் 4 ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்துவிட்டது .
இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள். சமந்தா விவாகரத்துக்கு பிறகு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டார். அது மட்டும் இல்லாமல் அவர் உடல் ரீதியாகவும் பல பாதிப்புகளை சந்தித்தார். மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா அந்த நோயிலிருந்து விடுபட முடியாமல் தொடர்ந்து பல்வேறு சிகிச்சைகளை எடுத்து வந்ததோடு அந்த நோயின் பக்க விளைவாக பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்தார் .
மார்க்கெட் சரிந்து வாழ்க்கை இழந்த சமந்தா:
இதனால் அவரது உடல் தோற்றத்திலும் உடல் எடையும் மெலிந்து போய்விட்டது. இந்த நிலையில் விவாகரத்தால் மன உளைச்சலுக்கு ஆளான சமந்தா சரியாக உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் உடல் ரீதியாக பிரச்சனை சந்தித்ததோடு தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் மார்க்கெட் சரிந்து போனது.
ஒரு காலத்தில் சமந்தாவுடன் போட்டி போடவே நடுங்கிய பல நடிகைகள் இன்று சமந்தாவை முந்தி கொண்டு முன்னுக்கு சென்று விட்டார்கள். மார்க்கெட் இழந்து சினிமா தொழிலையே விட்டுவிட்டு போய் விடலாமா என்ற ஒரு யோசனையில் ஒன்றும் புரியாமல் இருந்து வருகிறாராம் . இதற்கெல்லாம் காரணம் நாக சைதன்யா தான் என சமந்தா ரசிகர்கள் அவரை திட்டி விமர்சித்து வருகிறார்கள்.