சமந்தா :
தென் இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக இருந்தவரும் சமந்தா நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு தொடர்ச்சியாக அடுத்த அடுத்த திரைப்படங்களிலும் வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். இதனிடையே அவர் மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
தனது உடலில் மிகவும் மோசமாக பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். அவர் உடல் எடை மிகவும் மெலிந்து போய்விட்டதாக ரசிகர்களே தெரிவித்து வந்தார்கள். நாக சைதன்யாவுக்கு விரைவில் சோபிதாவுடன் இரண்டாவது திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் சமந்தாவின் திருமணமும் விரைவில் நடைபெறும் என தற்போதைய தகவல் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இரண்டாவது திருமணம்:
ஆம் நடிகை சமந்தா ஒருவரின் கையைப் பிடித்தபடி நடந்து வரும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அந்த நபர் மிகப்பெரிய தொழிலதிபர் என்று கூறப்படுகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் அடடா இது புதுசா இருக்கே ஒரு வேலை அந்த நபரை சமந்தா காதலிக்கிறாரோ இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கிறாரோ என கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.
அதேபோல் சில நாட்களுக்கு முன்பு குழந்தை குறித்து பேசிய நடிகை சமந்தா குழந்தை பெற்றுக் கொள்வதற்கு இப்போது ஒன்றும் தாமதமாகி விடவில்லை. குழந்தை பெற்றுக் கொள்வதற்கும் அதை அனுபவிக்கவும் எனக்கு மிகவும் ஆசையாக இருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.
நாக சைதன்யா முன்திருமணம்:
இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது சமந்தா இரண்டாம் திருமணம் செய்ய முனைப்புடன் இருக்கிறாரோ என்ற ஒரு சந்தேகம் ரசிகர்களுக்கு வந்து விட்டது இப்படியே பார்த்தால் நாக சைதன்யா சோபிதா துலிபாலாவுக்கு முன்னதாகவே சமந்தா மறுமணம் செய்து கொள்வார் போல இருக்கே என்ன நெட்டிசன்ஸ் கூறி வருகிறார்கள். எது எப்படியோ சாம் சந்தோஷமா இருந்தால் போதும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.