நடிகை சமந்தா:
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகையாக இருந்து வரும் நடிகை சமந்தா தெலுங்கு மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஹிட் நடிகையாக இங்கு பெயர் எடுத்தார். நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .

பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள். நாக சைதன்யா தற்போது சோபிதா துலிபாலாவை இரண்டாம் திருமணம் செய்ய இருக்கிறார். இந்த நிலையில் சமந்தா குறித்தும் சமீபத்திய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது .
அர்ஜுன் கபூருடன் சமந்தா காதல்:
அதாவது, சமந்தா பிரபல தயாரிப்பாளரான போனி கபூரின் மகனான நடிகர் அர்ஜுன் கபூரை காதலித்து வருவதாக தற்போது ஒரு புது பேச்சு கிளப்பி இருக்கிறது. அதாவது சமந்தா தனது Instagram பக்கத்தில் ஒரு கவிதையை எழுதி இருக்கிறார் .அந்த போஸ்டின் கமெண்ட் செக்ஷனில் நடிகர் அர்ஜுன் கபூர் இந்த கவிதையின் பிரிண்ட் எனது வீட்டின் சுவற்றில் மாற்றப்பட்டு இருக்கிறது என தெரிவித்திருக்கிறார் .

இதை கவனித்த நெட்டிசன்கள் அடடே அர்ஜுன் கபருக்கும் சமந்தாவுக்கும் டேஸ்ட் ஒரே மாதிரி இருக்கிறதே என கூறியுள்ளனர். இதற்கு சமந்தா ஹார்டின்ஸ் பறக்க விட்டிருக்கிறார். ஒருவேளை இருவரும் காதலிக்கிறார்களோ? திருமணம் செய்யப் போகிறார்களோ? என சந்தேகித்துள்ளனர்.
தீயாய் பரவும் கிசு கிசு:
நாக சைத்தான திருமணம் செய்யும் வேலையில் சமந்தா இன்னொரு காதலில் கிளுகிளுப்பாக இப்படி பேசி வருவது நல்லா தான் இருக்கு என சமந்தாவின் ரசிகர்களும் நெட்டிசன்களும் கூறி வருகிறார்கள் .

தற்போது அர்ஜுன் கபூர் மற்றும் சமந்தா காதல் கிசுகிசு பேச்சு பாலிவுட் மற்றும் கோலிவுட் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு இருக்கிறது. முன்னதாக நடிகர் அர்ஜுன் கபூர் 50 வயது நடிகை ஆன மலாய்கா அரோராவை காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் தான் அவரை பிரிந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது