தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகையாக இருந்து வந்த நடிகை சமந்தா தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார்.
இவர் தமிழ் தெலுங்கில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார். தெலுங்கில் ஹேமாயா சேஷாவே திரைப்படம் தான் சமந்தா நடிப்பில் வெளிவந்த முதல் தெலுங்கு திரைப்படம் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது .
மேலும் இது விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் நாக சைதன்யாவுக்கு சமந்தா ஜோடியாக நடித்திருந்தார். அப்போது இருந்தே இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு பின்னர் 8 ஆண்டுகள் கழித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.
மிகச் சிறந்த காதல் ஜோடிகளாக நட்சத்திர ரசிகர்களால் பார்க்கப்பட்டு வந்த சமயத்தில் திடீரென விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்கள்.சமந்தா விவாகரத்துக்கு பிறகு தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து அதிக கவனத்தை செலுத்தி வருகிறார்.நாக சைத்தாயா பிரபல நடிகையான சோபிதா துலிபாலாவை ரகசியமாக டேட்டிங் செய்து வந்தார். பின்னர் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெற இருக்கிறது.
இதனிடையே இந்தியில் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். இப்படியான நேரத்தில் சமீபத்தில் தனது தோழியும் பிரபல பாடகியமான சின்மயியின் கணவர் ராகுல் உடன் சமந்தா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது மேடையில் அவர் அருகில் நின்று கொண்டிருக்கும்போது தனது கவர்ச்சி ஆடை அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொண்டே சமந்தா அவரிடம் நெருக்கமாக போய் அவரது கைகளை இறுக்கமாக பிடித்து கைகோர்த்து என்னவோ பேசுகிறார்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. ஆனால் சமந்தா மற்றும் ராகுல் இருவரும் மிகச் சிறந்த நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் ஆரம்பத்திலிருந்து திரைப்படங்களில் நடித்தும் ராகுல் இயக்கத்தில் சமந்தா நடித்தும் வருகிறார். மிகச் சிறந்த நண்பர்கள் என்று சமந்தாவே பல மேடைகளில் கூறி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது.