ஏ.ஆர்.முருகதாஸ்-சல்மான் கான் கூட்டணி
பாலிவுட்டின் டாப் நடிகரான சல்மான் கான், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் “சிக்கந்தர்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள நிலையில் இவர்களுடன் காஜல் அகர்வால், சத்யராஜ், சர்மான் ஜோஷி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வருகிற 30 ஆம் தேதி ரம்ஜானை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் ஊடகத்தில் பேசிய சல்மான், தனது ஆதங்கத்தை மிகவும் வெளிப்படையாக வெளிப்படுத்தியுள்ளார்.

உங்க படமெல்லாம் நாங்க பாக்குறோம், ஆனால்?
“ரஜினிகாந்த், சிரஞ்சீவி, சூர்யா, ராம் சரண் போன்றோரின் திரைப்படங்களை நாங்கள் இங்கு பார்க்கிறோம். நன்றாக ஓடுகின்றன. ஆனால் எங்கள் படங்களை அவர்களின் ரசிகர்கள் பார்க்கச் செல்வதே இல்லை” என பேசினார்.
மேலும் பேசிய அவர், “அவர்களின் ஊர்களுக்கு நான் செல்லும்போதெல்லாம் பாய் பாய் என்று ரசிகர்கள் என்னை அழைப்பார்கள். ஆன்னால் தியேட்டருக்குச் செல்வதில்லை” எனவும் அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.