டாடா
கடந்த 2023 ஆம் ஆண்டு கவின், அபர்ணா தாஸ் நடிப்பில் வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்ற திரைப்படம் “டாடா”. இத்திரைப்படத்தை கணேஷ் கே பாபு இயக்கியிருந்தார். இதனை தொடர்ந்து கணேஷ் கே பாபு ஜெயம் ரவியை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
சக்தி வாசு
கணேஷ் கே பாபு இயக்கும் புதிய திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு வில்லனாக பி.வாசுவின் மகன் சக்தி வாசு நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. தனது கெரியரின் தொடக்கத்தில் பல திரைப்படங்களில் சக்தி நடித்து வந்தாலும் அத்திரைப்படங்கள் எதுவும் அவரது கெரியருக்கு கை கொடுக்கவில்லை. அதனை தொடர்ந்து அவர் எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. அதற்கிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் சக்தி.

இந்த நிலையில் பல ஆண்டுகள் கழித்து ஜெயம் ரவியின் புதிய திரைப்படத்தின் மூலமாக ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார் சக்தி.