தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர நடிகைகளில் ஒருவராக பார்க்கப்படுபவர் தான் நடிகை சாய் பல்லவி. மலையாள சினிமாவில் முதன் முதலில் தனது நடிப்பு வாழ்க்கை துவங்கிய இவர் பிரேமம் படத்தின் மூலமாக அனைவரது கவனத்தை ஈர்த்தார்.
அவரது இயக்கத்தில் வெளிவந்த பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த தென் இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.
குறிப்பாக மலர் டீச்சர் கதாபாத்திரம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. முதல் படத்திலிருந்து மிகப்பெரிய வரவேற்பு பெற்ற சாய் பல்லவிக்கு தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது.
இதனிடையே மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். முன்னதாக தாம் தூம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக சாய் பல்லவி நடித்திருந்தார்.
தற்போது சாய்பல்லவி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் அமரன். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் .
Also Read : அங் கூப்பிட்டு போனான்….இதயம் உடைந்தது… இளைஞர்களை சோகத்தில் ஆழ்த்திய பிரியங்கா மோகன்!
மறைந்த ராணுவ வீரரான மேஜர் முகுந்த் வாழ்க்கை வரலாறு படத்தில் அவரின் மனைவி இந்து ரெபேக்கா வர்க்கிஸ் கேரக்டரில் நடிகை சாய் பல்லவி நடித்திருக்கிறார்.
இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் சாய்பல்வி படு தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தை பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை சாய் பல்லவி முன்னதாக நான் பிரேமம் திரைப்படத்தில் நடிக்கவே மறுத்தேன்.
காரணம் அந்த திரைப்படத்தின் வாய்ப்பு எனக்கு வந்த போது நான் ஜார்ஜியாவில் மருத்துவம் படித்துக் கொண்டிருந்தேன்.
அப்போது அந்த வாய்ப்பு போலியானது. இதுபோன்ற வாய்ப்பு எல்லாம் எனக்கு கிடைக்கவே கிடைக்காது.
இது பொய் என நினைத்து வேண்டாம் என மறுத்தேன். அதன் பிறகு அது உண்மை தன்மையை அறிந்து கொண்டு நடிக்க சம்மதித்தேன்.
அப்படி வெளிவந்த திரைப்படம் தான் பிரேமம். அந்த திரைப்படம் எனக்கு நல்ல அறிமுகத்தையும் அடையாளத்தையும் கொடுத்தது என சாய்பல்லவி பேசியிருக்கிறார்.