12 வருடங்கள் கழித்து வெளியாகும் திரைப்படம்!
கடந்த 12 வருடங்களாக கிடப்பில் கிடந்த “மதகஜராஜா” திரைப்படம் வருகிற 12 ஆம் திரையரகுகளில் வெளியாக உள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் விஷால் கதாநாயகனாகவும் வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி போன்றோர் கதாநாயகிகளாகவும் நடித்துள்ள இத்திரைப்படத்தை ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிறுவனத்தின் மீதான கடன் சுமை காரணமாக இத்திரைப்படம் 12 வருடங்களாக வெளிவராமல் கிடப்பில் கிடந்தது. ரசிகர்கள் பலரும் “எப்போது மதகஜராஜா வெளிவரும்?” என எதிர்பார்த்துக்கொண்டே இருந்தனர். ஆனால் பல ஆண்டுகளாக இத்திரைப்படத்தை குறித்த அறிவிப்பு வெளிவராமல் இருந்ததால் ரசிகர்களே இத்திரைப்படத்தை மறந்துப்போயினர். இதனிடையே அஜித்குமாரின் “விடாமுயற்சி” திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போக “மதகஜராஜா” திரைப்படம் வெளியாவதாக திடீரென அறிவிக்கப்பட்டது. இது ரசிகர்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது.
இது என்னுடைய வசனம்!
“மதகஜராஜா” திரைப்படத்தின் டிரைலரில் “வாழ்க்கையில எதுல ஜெயிக்கிறோங்கிறது முக்கியமில்லை. எதுல ஜெயிச்சா வாழ்க்கைய ஜெயிக்கிறோங்குறதுதான் முக்கியம்” என்று ஒரு வசனம் இடம்பெறுகிறது. இந்த நிலையில் கிரிக்கெட் வீரரும் நடிகருமான சடகோபன் ரமேஷ் சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியபோது, “ஒரு நாள் சுந்தர் சி என்னிடம் திரைப்படத்தின் ஒரு காட்சியை சொல்லி இதற்கு எதாவது Punch Line இருந்தால் கூறுங்கள் என்று கேட்டார். அதற்கு நான் ‘வாழ்க்கையில் எதுல ஜெயிக்கிறோங்கிறது முக்கியமில்லை. எதுல ஜெயிச்சா வாழ்க்கைய ஜெயிக்கிறோங்கிறதுதான் முக்கியம்’ என்று ஒரு Punch Line-ஐ கூறினேன். அவர் அதனை Note செய்துகொண்டார்.

ஆனால் அந்த வசனத்தைதான் படத்தில் வைத்திருக்கிறார். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.சுந்தர் சிக்கு எனது மனமார்ந்த நன்றி” என்று மிகவும் உற்சாகமாக அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். சடகோபன் ரமேஷ் “மதகஜராஜா” திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.