90’ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட்
விஜய், ஜெனிலியா நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “சச்சின்”. இத்திரைப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க ஜான் மகேந்திரன் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு காதல் திரைப்படமாக உருவாகியிருந்தது. குறிப்பாக இத்திரைப்படம் 90’ஸ் கிட்ஸ்களின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக அமைந்தது.

தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படி அமைந்தது. குறிப்பாக “கண் மூடி திறக்கும்போது” என்ற பாடல் இப்போதும் தமிழ் இசை ரசிகர்களின் பிளேலிஸ்ட்டுகளில் இடம்பெற்றுள்ளது. மேலும் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற வடிவேலு காமெடி இப்போதும் ரசிக்கவைப்பது போல் அமைந்திருந்தது.
ரீரிலீஸ்
இந்த நிலையில் “சச்சின்” திரைப்படத்தை ரீரிலிஸ் செய்ய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அதாவது “சச்சின்” திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் விதமாக 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி “சச்சின்” திரைப்படத்தை ரீரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.