இவங்க லொள்ளுக்கு அளவே இல்லை…
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நகைச்சுவை தொடராக ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி “லொள்ளு சபா”. தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக Spoof என்ற Genre-ஐ புகுத்திய தொடர் இதுதான். பல திரைப்படங்களை பாரபட்சமே பார்க்காமல் கலாய்த்து தள்ளுவது இந்த நிகழ்ச்சியின் இயல்பு. குறிப்பாக பல நடிகர்களே “என் படத்தை எப்போ கலாய்ப்பீங்க” என்று கேட்கும் அளவுக்கு இவர்களது நிகழ்ச்சி சம்பந்தப்பட்டவர்களையே ரசிக்க வைத்தது.

மிரட்டிய விஜய்யின் தந்தை…
இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு லொள்ளு சபா சுவாமிநாதன் அளித்த பேட்டி ஒன்றில் விஜய்யின் தந்தை லொள்ளு சபா இயக்குனரை மிரட்டிய சம்பவத்தை குறித்து பகிர்ந்துகொண்ட செய்தி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது விஜய் நடித்த “போக்கிரி” திரைப்படத்தை பேக்கரி என்ற பெயரில் லொள்ளு சபா குழுவினர் பகடி செய்தனர்.

இதனை பார்த்து கடுப்பான விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி. லொள்ளு சபாவின் இயக்குனரான ராம் பாலாவை வீட்டிற்கு அழைத்து மிரட்டினாராம். அதன் பின் விஜய் தொலைக்காட்சியில் விஜய்யை பாராட்டி ஒரு விழாவை ஏற்பாடு செய்து ஐஸ் வைத்த பிறகுதான் அந்த பிரச்சனை சுமூகமாக முடிந்ததாம்.