கடவுள் பாதி மிருகம் பாதி…
2001 ஆம் ஆண்டு கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்து வெளிவந்த திரைப்படம் “ஆளவந்தான்”. இத்திரைப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். இத்திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் ரவீனா தன்டன், அனு ஹாசன், ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

எனக்கு சம்பளமே தரவில்லை…

இந்த நிலையில் சமீபத்தில் தனது வீடியோ ஒன்றில் பேசிய நடிகர் ரியாஸ் கான், “ஆளவந்தான் திரைப்படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்திற்கு எனக்கான தொகை ஒன்றை கொடுத்தார்கள். ஆனால் அதன் பின் அத்திரைப்படத்தில் கூடுதலாக நான் செய்த பணிகளுக்கு சம்பளம் தரவில்லை” என மனம் உடைந்து பேசினார். “ஆனால் ஆளவந்தான் திரைப்படத்தில் நடித்ததனால்தான் ரஜினியின் பாபா பட வாய்ப்பு கிடைத்தது” என அவர் அந்த வீடியோவில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.