சூர்யாவின் ரெட்ரோ
நடிகர் சூர்யா, “கங்குவா” திரைப்படத்தை தொடர்ந்து “ரெட்ரோ” திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள நிலையில் சந்தோஷ் நாராயணன் இத்திரைப்படத்திற்கு இசையமைக்க 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது. வருகிற மே மாதம் 1 ஆம் தேதி இத்திரைப்படம் வெளிவரவுள்ளது.

இத்திரைப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளிவந்தது. இத்திரைப்படம் கார்த்திக் சுப்பராஜ் பாணியிலான ஒரு பக்காவான ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளதாக இதன் டீசரில் இருந்து தெரிய வருகிறது. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகியுள்ளது.
காமிகஸ் வடிவில்…!
“ரெட்ரோ” திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட BTS (Behind The Scenes) காட்சிகளை காமிகஸ் வடிவில் வெளியிட “ரெட்ரோ” படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த புது முயற்சி ரசிகர்களை பெரிதளவில் ஈர்த்துள்ளது. இந்த காமிகஸ் வடிவ BTS காட்சிகள் விரைவில் வெளியிடப்படும் என படக்குழு அதிகாராப்பூர்வமாக அறிவித்துள்ளது. சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்த நிலையில் ரசிகர்கள் பலரும் “ரெட்ரோ” திரைப்படத்தின் வெற்றிக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர்.
