திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம்
“ஜெயம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் ஜெயம் ரவி. இவர் தற்போது ரவி மோகன் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார். தனது முதல் திரைப்படத்தின் மூலமே ரசிகர்களை கவர்ந்திழுத்த ரவி மோகன் அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவர் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய சில திரைப்படகளில் ஒரு முக்கியமான திரைப்படம்தான் தற்போது மறுவெளியீட்டுற்கு தயாராகி வருகிறது.

அம்மா சென்டிமென்ட் படம்…
அதாவது ரவி மோகன் நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படமான “எம்.குமரன் S/O மகாலட்சுமி” திரைப்படம் வருகிற 14 ஆம் தேதி திரையரங்குகளில் மறுவெளியீடு காண உள்ளது.
இத்திரைப்படத்தில் ரவி மோகனுக்கு அம்மாவாக நடித்திருந்தார் நதியா. இவ்விருவருக்கும் இடையே காட்சிப்படுத்தப்பட்ட அம்மா-மகன் பாசம் சம்பந்தப்பட்ட காட்சிகள் இத்திரைப்படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது. மனதை உருகவைக்கும் காட்சிகளாகவும் அது அமைந்திருந்தது.

இத்திரைப்படத்தில் ரவி மோகனுக்கு ஜோடியாக அசின் நடித்திருந்தார். தமிழில் அசினுக்கு வெளியான முதல் திரைப்படம் இது ஆகும். மேலும் இவர்களுடன் பிரகாஷ்ராஜ், விவேக் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.