நடத்துனர் To சூப்பர் ஸ்டார்
பெங்களூரில் பேருந்து நடத்துனராக தனது வாழ்க்கையை தொடங்கிய ரஜினிகாந்த் இன்று உலக தமிழ் சினிமா ரசிகர்களின் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் என்றால் அவருடையே கடுமையான உழைப்பும் நடிப்பின் மீதான தீரா காதலும்தான் காரணமாகும். தனது ஸ்டைலான நடிப்பால் உலக ரசிகர்கள் பலரையும் கட்டிப்போட்டுள்ள ரஜினிகாந்த் இப்போதும் இந்திய சினிமாவின் மிக முக்கியமான டாப் நடிகராக வலம் வருகிறார். இந்த நிலையில் ஒரு காலகட்டத்தில் ரஜினிகாந்துக்கே ரெட் கார்டு கொடுத்திருக்கிறார்கள்.

சூப்பர் ஸ்டாருக்கே ரெட் கார்டா?
1993 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் “உழைப்பாளி”. இத்திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.எனினும் இத்திரைப்படத்தை வெளியிட விநியோகஸ்தர்கள் தயாராக இல்லை. ஏனென்றால் ரஜினிகாந்திற்கும் விநியோகஸ்தர்கள் சங்கத்திற்கும் இடையே உருவான ஒரு மனஸ்தாபத்தால் அந்த சமயத்தில் விநியோகஸ்தர்கள் சங்கம் ரஜினிகாந்திற்கு ரெட் கார்டு போட்டது.

ஆனாலும் ரஜினிகாந்த் இத்திரைப்படத்தை விநியோகஸ்தர்கள் இல்லாமல் தனது ரமணா திரைப்பட விநியோக நிறுவனத்தின் மூலம் நேரடியாக இத்திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட்டார். இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன் பின் ரஜினிகாந்த் மீதான ரெட் கார்டும் நீங்கியது.