DD Next Level
சந்தானம் ஹீரோவாக நடித்து 2016 ஆம் ஆண்டு வெளிவந்த “தில்லுக்கு துட்டு” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து அத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 2019 ஆம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் “DD Returns” திரைப்படம் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளிவந்தது.

இதில் DD என்பதற்கு தில்லுக்கு துட்டு என்றே கூறப்பட்டது. இத்திரைப்படத்தை தொடர்ந்து தற்போது “DD Next Level” திரைப்படத்தில் நடித்து வருகிறார் சந்தானம். இத்திரைப்படத்தின் First Look போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதில் கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
திடீரென மாறிய டைட்டில்
எனினும் “DD Next Level” திரைப்படத்தின் First Look போஸ்டரில் DD என்பதற்கு Devil’s Double என்று விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது. இவ்வாறு தில்லுக்கு துட்டு என்ற டைட்டில் திடீரென Devil’s Double என்று மாறியதற்கு பின்னணியில் உள்ள காரணத்தை குறித்து ஒரு தகவலை பகிர்ந்துள்ளார் பிரபல பத்திரிக்கையாளரான பிஸ்மி.
அதாவது “DD Returns” திரைப்படத்திற்கு ரமேஷ் குமார் என்பவர்தான் தயாரிப்பாளர் என்று டைட்டில் கார்டில் இருந்தது. இந்த ரமேஷ் குமார் என்பவர் சந்தானத்தின் மேனேஜராக இருந்தார். சில நாட்களுக்கு முன்பு ரமேஷுக்கும் சந்தானத்திற்கும் இடையே மனஸ்தாபங்கள் ஏற்பட ரமேஷ் தனது மேனேஜர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் “DD Next Level” திரைப்படத்தில் DD என்பதற்கு Dhillukku Dhuttu என்று விளக்கம் கொடுத்தால் தன்னுடைய அனுமதி இல்லாமல் தான் தயாரித்த படத்தில் டைட்டிலை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று ரமேஷ் நீதிமன்றத்தை நாட வாய்ப்புள்ளதால் DD என்பதற்கு Devil’s Double என்று புதிய விளக்கம் கொடுத்திருக்கிறார்கள் என பிஸ்மி தெரிவித்துள்ளார். “DD Next Level” திரைப்படத்தை தயாரித்து வருபவர் நடிகர் ஆர்யா என்பது குறிப்பிடத்தக்கது.