மயக்கும் குரல்
பிரபல பாடகியும் நடிகையுமான ஆண்ட்ரியா தமிழ் திரையுலகில் பாடகியாக அறிமுகமானாலும் “பச்சைக்கிளி முத்துச்சரம்” திரைப்படத்தின் மூலம் இளைஞர்களின் மனம் கவர்ந்த நடிகையாக மிளிர்ந்தார். அதனை தொடர்ந்து “ஆயிரத்தில் ஒருவன்”, “விஸ்வரூபம்”, “துப்பாறிவாளன்”, “வட சென்னை” போன்ற பல திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தார். மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள “பிசாசு 2” திரைப்படம் வருகிற மார்ச் மாதம் திரையரங்கில் வெளியாகவுள்ளது.

ஆண்ட்ரியா ஏன் டாப்புக்கு வரல?
இந்த நிலையில் சமீபத்தில் தனது வீடியோ ஒன்றில் பேசிய பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன், “ஆண்ட்ரியாவை பொறுத்தவரையில் அவர் நல்ல பாடகி மட்டுமல்லாது ஒரு நல்ல நடிகையும் ஆவார். அப்படி இருந்தும் அவர் அடைய வேண்டிய உயரத்தை அவர் அடையவில்லை என்றால் அதற்கு முக்கியமான காரணம் அவரிடம் சரியான திட்டமிடல் இல்லை என்பதுதான்.

அவரை பொறுத்தவரை அவருக்கு ஒரு நல்ல வழிகாட்டி அமைந்திருந்தால் இன்னும் பெரிய இடத்தை அவர் தொட்டிருப்பார் என்பதுதான் என்னுடைய எண்ணம்” என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.