ஜெயம் ரவி To ரவி மோகன்
பல ஆண்டுகளாக ஜெயம் ரவியாக தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் குடிகொண்டு வந்தவர் சில நாட்களுக்கு முன்பு தனது பெயரை ரவி மோகன் என்று மாற்றினார். “காதலிக்க நேரமில்லை” திரைப்படத்தை தொடர்ந்து “ஜீனி” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் ரவி மோகன். அது போக சிவகார்த்திகேயனின் 25 ஆவது திரைப்படத்திலும் ரவி மோகன் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ரவி மோகனின் புதிய திரைப்படத்தின் அட்டகாசமான டைட்டில் புரொமோ வெளிவந்துள்ளது.

எனக்கு இன்னொரு பெயர் இருக்கு!
“டாடா” திரைப்படத்தை இயக்கிய கணேஷ் பாபு ரவி மோகனை வைத்து இயக்கபோகும் திரைப்படம் இது. இத்திரைப்படத்திற்கு “கராத்தே பாபு” என்று டைட்டில் வைத்துள்ளனர். சட்டசபையில் நடக்கும் விவாதங்களை வைத்து இத்திரைப்படத்தின் புரொமோ அமைந்துள்ளது. இதில் ரவி மோகன் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினராக நடிக்க உள்ளார் என்று புரொமோ வீடியோவில் இருந்து தெரிய வருகிறது. “உங்கள் அனைவருக்கும் என்னை சண்முக பாபுவாகத்தான் தெரியும். ஆனால் எனக்கு இன்னொரு பெயரும் இருக்கிறது” என்று ரவி மோகன் வசனம் பேசுகிறார்.
இந்த புரொமோ வீடியோவை பார்க்கும்போது இத்திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு Political Thriller ஆக உருவாக உள்ளது என தெரிய வருகிறது. இத்திரைப்படத்தை கணேஷ் பாபு இயக்கவுள்ள நிலையில் சாம் சி.எஸ். இத்திரைப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இதில் ரவி மோகனுக்கு ஜோடியாக தௌதி ஜிவால் நடிக்க உள்ளார். மேலும் இவர்களுடன் நாசர், கே.எஸ்.ரவிக்குமார், சக்தி வாசு உள்ளிட்ட பலரும் நடிக்க உள்ளனர். இத்திரைப்படத்தின் டைட்டில் புரொமோ வீடியோ இதோ….