வெற்றிமாறனின் கதையம்சம்
வெற்றிமாறன் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். இவரது திரைப்படங்களில் சமூக கருத்துக்கள் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். இந்த நிலையில் வெற்றிமாறன் கதையை கௌதம் வாசுதேவ் மேனன் திரைப்படமாக இயக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு ஒரு தகவல் வெளிவந்தது. இத்திரைப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஹீரோ யார்னு தெரிஞ்சிக்கனுமா?
வெற்றிமாறன் கதையில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கவுள்ள திரைப்படத்தில் ரவி மோகன் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என தயாரிப்பாளரிடம் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயரை பரிந்துரைத்துள்ளாராம் கௌதம் மேனன். இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என அறியப்படுகிறது.