ராஷ்மிகா மந்தனா:
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா கன்னட சினிமாவில் கிரிக் பார்ட்டி திரைப்படத்தில் நடித்த் முதன் முதலில் திரைத்துறையில் நடிகையாக அறிமுகம் ஆனார். அதுதான் இவர் நடித்த முதல் திரைப்படம் .

அதை அடுத்து கன்னடத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த ராஷ்மிகாவுக்கு தெலுங்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கில் சலோ என்ற திரைப்படத்தில் நடித்து என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட திரைப்படங்கள் மாபெரும் வெற்றி திரைப்படங்களாக அமைந்தது .
தெலுங்கில் தொடர் வெற்றிகள்:
தெலுங்கில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து அந்த நட்சத்திர ஹீரோ அந்தஸ்தை பிடித்தார். பிறகு தமிழில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும் இவர் பாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் வெளிவந்த அனிமல் திரைப்படம் நல்ல விமர்சனத்தையும் வரவேற்பையும் பெற்று இருந்தது.
தற்போது இவர் புஷ்பா 2 திரைப்படத்தில் நடித்திருக்கிறார். புஷ்பா முதல் பாகம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றிருந்தது. இத்திரைப்படத்தில் ராஷ்மிகாவுக்கு ஜோடியாக பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி ரிலீஸுக்கு காத்திருக்கிறது. இதன் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
புஷ்பா 2 சம்பளம்:
இந்த நிலையில் இந்த படத்திற்காக ராஷ்மிகா மந்தனா வாக்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதனை அவரை தெரிவித்திருக்கிறார். புஷ்பா படத்திற்கு இரண்டு கோடி சம்பளம் முன்னதாக நான் பெற்றேன். பிறகு அதன் மார்க்கெட் உச்சத்தை தொட்டு மாபெரும் வெற்றி பெற்றதால் புஷ்பா 2 திரைப்படத்தில் ரூ.10 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறேன் என மேடையிலே உண்மையை உடைத்திருக்கிறார்.

பொதுவாக நடிகைகள் தங்களுடைய சம்பள விஷயத்தை வெளிப்படையாக கூற மாட்டார்கள். ஆனால் ரஷ்மிகா மந்தனா நடித்து வெளியாக இருக்கும் திரைப்படத்தின் சம்பளத்தை இப்படி பொதுவெளியில் அறிவித்திருப்பது ரசிகர்களை வியக்கை வைத்திறது. இரண்டு கோடியில் இருந்து ரூ. 10 கோடியா இவ்வளவு பெரிய ப்ரோமோஷனா என கேட்ட ரசிகர்கள் ஆடிப் போய்விட்டார்கள்.