நடிகை ராஷ்மிகா மந்தனா:
தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக இருந்து வந்த நடிகை ராஷ்மிகா மந்தனா பாலிவுட் திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக பான் இந்தியா நடிகையாக மிக குறுகிய காலத்திலேயே மாறினார். தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்த இவர் தமிழ் சினிமாவில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

முன்னதாக கன்னட திரைப்படமான கிரிக் பார்ட்டி திரைப்படத்தில் நடித்து திரை உலகத்திற்கு அறிமுகமாகி இருந்தவர் ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களில் நடித்து மிகக் குறுகிய காலத்திலே பிரபலமான நடிகையானார்.
ரகசிய காதல்:
விஜய் தேவர் கொண்டாவுடன் நடித்த டியர் காம்ரேட் மற்றும் கீதா கோவிந்தம் உள்ளிட்ட திரைப்படங்கள் மாபெரும் வெற்றி திரைப்படங்களாக பார்க்கப்பட்டது. இவர்களது ஜோடி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போனது. அதன் மூலமாக இவர்கள் இருவரும் நெருக்கமாக பழக ஆரம்பித்தனர் .

பின்னர் ரகசியமாக காதலித்து டேட்டிங் சென்று தனித்தனியே வெளியிடும் புகைப்படங்கள் மூலம் இவர்கள் இருவரும் ஒரே இடத்திற்கு தான் சென்றிருக்கிறார்கள் என ரசிகர்கள் கண்டுபிடித்து விடுவார்கள். ஆனாலும் இருவருமே அதை உறுதி செய்யாமல் இருந்து வந்த நிலையில் தற்போது ராஷ்மிகா மந்தனா தன்னுடைய காதலையும் காதலர் விஜய் தேவர் கொண்டா தான் என்பதையும் உறுதி செய்திருக்கிறார்.
லீக்கான புகைப்படம்:
ஆம், அவர் விஜய் தேவரகொண்டாவும் இணைந்து டேட்டிங் சென்றுள்ளார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ராஷ்மிகா மந்தரா ஏற்கனவே தனது instagram பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். ஆனால் இந்த புகைப்படத்தை விஜய் தேவர் கொண்டா தான் எடுத்தார் என அவர் குறிப்பிடவில்லை இதனால் அந்த புகைப்படத்தினை விஜய் தேவர் கொண்டா தான் எடுத்தார் என்பது யாருக்கும் தெரியவில்லை.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வேகமாக வைரல் ஆகி வந்தது. அந்த புகைப்படத்தில் அணிந்திருந்த உடையில் விஜய் தேவர் கொண்டவுடன் அவர் இருக்கும் புகைப்படம் வேகமாக பரவி இருக்கிறது. இதன் மூலம் ராஷ்மிகா மந்தனா இத்தனை நாளாக டேட்டிங் செய்து வந்தது விஜய் தேவர் கொண்டாவை தான் அவரை தான் காதலிக்கிறார் என்பது இந்த புகைப்படத்தின் மூலம் உறுதியாகி இருக்கிறது.
மேலும், புஷ்பா 2 படத்தின் விழாவில் பேசிய ராஷ்மிகாவிடம் நீங்கள் காதலிக்கும் நபர் திரைப்படத்துறையை சார்ந்தவரா? வேறு துறையில் இருப்பவரா? என கேள்வி எழுப்பியதற்கு “அது எல்லாருக்கும் தெரியும்” என ராஸ்மிகா மந்தனா இன்டைரக்டாக அது விஜய் தேவர் கொண்டா தான் என்பதை உறுதி செய்திருக்கிறார். இதோ அந்த வீடியோ: