புஷ்பா 2 திரைப்படம்:
அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரமாண்டமான பொருட்செலவில் உருவாகி ரிலீசுக்கு தயார் நிலையில் காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் புஷ்பா 2. டிசம்பர் 5ம் தேதி வெளியாகயுள்ள இத்திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்திருக்கிறார் .

இவர்களுடன் வில்லனாக நடிகர் பஹத் பாசில் நடிக்கிறார். இப்படத்தின் முதல் பாகம் வெளியாக மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் ரிலீசுக்கு தயார் நிலையில் காத்துக் கொண்டிருக்கிறது.
அல்லு அர்ஜுன் ராஷ்கா கெமிஸ்ட்ரி:
சமீபத்தில் நடைபெற்ற ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கூட நடிகர் அல்லு அர்ஜூனுடன் நடிகை ராஷ்மிகா மந்தனா கருப்பு நிறத்தில் படு கவர்ச்சியான சேலை அணிந்து கொண்டு அல்லு அர்ஜுனுடன் மேடையில் நடனம் ஆடிய வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி இருந்தது .
இதை அடுத்து நேற்று இது என்ன ஃபீலிங்ஸ் பாடல் லிரிக்ஸ் வீடியோவாக வெளியாகிய நிலையில் அதில் அல்லு அர்ஜுன் ராஸ்மிகா மந்தனாவின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது இந்த பீலிங்ஸ் பாடலில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா இருவரும் அதிகமாக இறங்கி குத்தாட்டம் போட்டிருக்கிறார்கள்.
எல்லை மீறிய ராஷ்மிகா மந்தனா:

முதல் பாகத்தில் ராஷ்மிகா மந்தனா புடவை கட்டி அடக்கம் ஒடுக்கமாக கிளாமரே காட்டாமல் நடித்து இருந்தார். ஆனால் தற்போது தாராளமாக காட்டி எல்லை மீறி கிளாமர் காட்சிகளில் இறங்கி குத்தாட்டம் போட்டு புஷ்பா 2 திரைப்படத்திற்கு மேலும் ஹைப் கிளப்பிட்டு இருக்கிறார். இதனால் ராஷ்மிகா மந்தனாவின் கிளாமரை புஷ்பா 2 திரைப்படத்தில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.