ஷங்கர் படத்துக்கு சுமாரான வரவேற்பு
ஷங்கர் இயக்கிய “கேம் சேஞ்சர்” திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பே கிடைத்தது. இத்திரைப்படத்தை தயாரித்தவர் தில் ராஜு.

“கேம் சேஞ்சர்” திரைப்படத்தை ரூ.450 கோடி செலவில் தயாரித்தார் தில் ராஜு. ஆனால் தற்போது வரை இத்திரைப்படத்திற்கு ரூ.127 கோடியே வசூல் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. “கேம் சேஞ்சர்” திரைப்படத்தின் மூலம் ஏற்பட்ட நஷ்டத்தால் தில் ராஜு ஆந்திராவில் தனக்கு சொந்தமாக இருந்த ஒரு நிலத்தை விற்றுவிட்டதாக கூட பேச்சுக்கள் அடிபட்டன.
கைகொடுக்கும் ராம் சரண்

இந்த நிலையில் தில் ராஜுவின் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் ராம் சரண் மீண்டும் தில் ராஜு தயாரிப்பில் ஒரு திரைப்படத்தில் நடிக்க வாக்கு கொடுத்துள்ளாராம். இந்த முறை சம்பளமே இல்லாமல் அல்லது மிகவும் குறைந்த சம்பளத்தில் தில் ராஜு தயாரிக்கும் படத்தில் நடித்துக்கொடுக்க ராம் சரண் முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.