டாப் நடிகர்
தனுஷ் சமீப காலமாக இந்திய சினிமாவின் டாப் நடிகராக வலம் வருகிறார். நடிகராக மட்டுமல்லாது “ராயன்”, “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்”, “இட்லி கடை” போன்ற திரைப்படங்களின் மூலம் இயக்குனராகவும் களமிறங்கியுள்ளார்.

தனுஷ் “இட்லி கடை” திரைப்படத்தை தொடர்ந்து “அமரன்” இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்து ஒரு அதிர்ச்சி செய்தி வெளிவந்துள்ளது.
இவ்வளவு கோடி பட்ஜெட்டா?

தனுஷ் நடிக்க உள்ள ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் திரைப்படத்தை அன்புச்செழியன் தயாரிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் இத்திரைப்படத்திற்கு ராஜ்குமார் பெரியசாமி ரூ.175 கோடி பட்ஜெட் கேட்கிறாராம். தனுஷை வைத்து இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்க அன்புச்செழியன் தயக்கம் காட்டி வருகிறாராம். ஆதலால் இந்த புராஜெக்டில் இருந்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறதாம்.