மணி சார்
இந்திய சினிமாவின் டிரெண்ட் செட்டர்களில் ஒருவராக வலம் வரும் மணிரத்னம், தனது தவித்துவமான திரைபாணியின் மூலம் இந்தியாவின் மிக முக்கியமான இயக்குனராக அறியப்படுகிறார். இந்திய சினிமாவில் பலருக்கும் இவர் ஒரு இன்ஸ்பிரேஷனாக திகழ்ந்து வருகிறார். இந்த நிலையில் மணிரத்னம் “விடுதலை” பட நடிகரை ஹீரோவாக நடிக்க வைக்க முயன்ற நிலையில் அந்த நடிகர் அந்த வாய்ப்பை மறுத்திருக்கிறார்.

ரோஜா
1992 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி கதாநாயகனாக நடித்து வெளிவந்த திரைப்படம் “ரோஜா”. இத்திரைப்படம் உருவாவதற்கு முன்னால் மணிரத்னம் ராஜீவ் மேனனை இத்திரைப்படத்தில் நடிக்க வைப்பதற்காக அவரிடம் இத்திரைப்படத்தின் முழு கதையையும் கூறினார். ஆனால் ராஜீவ் மேனன் “ரோஜா” படத்தில் ஹீரோவாக நடிக்க மறுத்துவிட்டார். அதன் பிறகுதான் அரவிந்த்சாமி “ரோஜா” திரைப்படத்தில் நடித்தார்.

ராஜீவ் மேனன் இந்திய சினிமாவின் மிக முக்கியமான ஒளிப்பதிவாளர். இவர் தமிழில் “மின்சார கனவு”, “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்”, “சர்வம் தாள மயம்” போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் அவர் “விடுதலை” மற்றும் “விடுதலை 2” ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.