நடத்துனர் டூ சூப்பர் ஸ்டார்
தமிழ் சினிமா மட்டுமல்லாது உலகத்தில் உள்ள பல கோடி ரசிகர்களை தன் வசப்படுத்தியவர் ரஜினிகாந்த். கர்நாடகாவில் ஒரு பேருந்து நடத்துனராக இருந்து தற்போது சூப்பர் ஸ்டாராக ரஜினிகாந்த் உயர்ந்திருக்கிறார் என்றால் அவரது அபாரமான உழைப்பே காரணம்.

தனது நிற அமைப்பால் பல ஒதுக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட ரஜினிகாந்த் அந்த தடைகளை எல்லாம் தாண்டி புகழின் உச்சத்தை அடைந்துள்ளார். அந்த வகையில் பல இந்திய நடிகர்களுக்கு உத்வேகம் கொடுக்கக்கூடிய நடிகராக வலம் வருகிறார்.
ரஜினிகாந்த் எழுதும் சுயசரிதை…
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது வாழ்க்கை வரலாற்றை சுயசரிதமாக எழுத உள்ளாராம். அதாவது “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு கிட்டத்தட்ட 3 மாதங்கள் இந்த சுயசரிதை எழுதவதற்கான நேரத்தை ஒதுக்க உள்ளாராம். இவ்வாறு ஒரு ஆச்சரிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது.