பாம்பும் ரஜினிகாந்தும்
பெரும்பாலான ரஜினிகாந்த் திரைப்படங்களில் ஏதாவது ஒரு தருணத்தில் பாம்பு சம்பந்தப்பட்ட காட்சிகள் தவறாமல் இடம்பெற்றுவிடும். ரஜினிகாந்துக்கும் பாம்புக்கும் இடையே ஒரு செண்டிமெண்ட் இருப்பதாக கிசுகிசு ஒன்று உலா வருவது உண்டு. அந்த வகையில் ரஜினிகாந்த் நடித்த “அண்ணாமலை” திரைப்படத்திலும் ஒரு மிகப்பிரபலமான பாம்பு இடம்பெறும் காட்சி ஒன்று இருந்தது.

அதாவது குஷ்பு வீட்டிற்கு ரஜினிகாந்த் வரும்போது அந்த சமயத்தில் பாம்பும் வந்துவிட, அனைவரும் அலறிக்கொண்டு வெளியே ஓடி வந்துவிடுவார்கள். அப்போது ரஜினிகாந்த் மேல் சிறிது நேரம் பாம்பு ஏறிக்கொள்ளும். இதை ஒரு நகைச்சுவை காட்சியாக படம்பிடித்து இருப்பார்கள். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, இந்த காட்சியை குறித்த ஒரு அதிர்ச்சியான தகவலை நகைச்சுவை கலந்து பகிர்ந்துகொண்டுள்ளார்.
அரண்டுப்போன ரஜினிகாந்த்…

அதாவது இந்த காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருந்தபோது படப்பிடிப்பு தளத்திற்கு வெளியே பாம்பின் உரிமையாளருக்கும் மேனேஜருக்கும் ஏதோ வாக்குவாதம் போய்க்கொண்டிருந்ததாம். அந்த காட்சியை படமாக்கி முடித்த பிறகு சுரேஷ் கிருஷ்ணா அவர்களிடம் என்ன பிரச்சனை என்று கேட்டபோது பாம்பின் உரிமையாளர் பாம்பின் பல்லை தைக்க மறந்துவிட்டார் என்று தெரிய வந்ததாம். இதனை கேட்டு சுரேஷ் கிருஷ்ணாவும் ரஜினிகாந்தும் அரண்டுபோய்விட்டார்களாம். “நல்ல வேளை ஒன்னும் ஆகலை” என்று அதன் பின் நிம்மதி கொண்டார்களாம்.