கன்டெக்டர் டூ சூப்பர் ஸ்டார்
பெங்களூரில் பேருந்து நடத்துனராக வேலை பார்த்த ரஜினிகாந்த் தற்போது இந்தியாவின் சூப்பர் ஸ்டாராக மிளிர்கிறார் என்றால் அவரது கடும் உழைப்புதான் காரணம். பல நடிகர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக திகழும் ரஜினிகாந்த் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பத்திரிக்கை பேட்டியில் ஒரு முக்கியமான விஷயத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

ஏன் அப்படிபட்ட படங்களில் நடிக்கிறேன்?
“என்னை பொறுத்தவரை எனக்கு வன்முறை கொஞ்சம் கூட பிடிக்காது. ஆனால் தொடர்ந்து அப்படிப்பட்ட திரைப்படங்களில் நான் நடித்துக்கொண்டிருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் என்னை அப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடிக்க வைக்கிறார்கள் என்பதே. எனக்கு யார் பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு என் படத்தின் மூலம் திரும்ப அந்த பணம் கிடைக்க வேண்டும். அதனால்தான் அவர்கள் என்னை தொடர்ந்து அப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடிக்க வைக்கிறார்கள். நானும் நடித்துக்கொண்டிருக்கிறேன்” என்று அந்த பத்திரிக்கை பேட்டியில் கூறியுள்ளார் ரஜினிகாந்த். இது தற்போது வெளிவந்துகொண்டிருக்கும் ரஜினி திரைப்படங்களுக்கும் பொருந்தும் என இத்தகவலை தனது வீடியோவில் பகிர்ந்துகொண்ட தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.