தனுஷின் விவாகரத்து:
நேற்று குடும்ப நல நீதிமன்றத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து வழக்கு இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது இருவரும் கேட்டுக்கொண்டபடி 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற திருமணம் செல்லாது என ரத்து செய்யப்பட்டு அவர்களுக்கு விவாகரத்து வழங்கப்பட்டது .

இந்த நிலையில் இவர்களின் விவாகரத்துக்கு மிக முக்கியமான காரணமே இவர்கள் இரண்டு பேர்தான் என பிரபலம் ஒருவர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்து பெரும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். ஆம், பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருப்பதாவது…
என்ன பிரச்சனை?
தனுஷையும் ஐஸ்வர்யாவையும் எப்படியாவது சேர்த்து வைக்க முயற்சித்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை. இருவருக்கும் கோர்ட் விவாகரத்து கொடுத்துவிட்டது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அதாவது கஸ்தூரிராஜாவுக்கு தேனியில் சொந்தமாக ஒரு தியேட்டர் இருக்கிறது.

அந்த தியேட்டரின் பெயரில் கஸ்தூரிராஜா வட்டிக்கு கடன் வாங்கினார். ஆனால், அந்த கடனை அவரால் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. இதனால் கடன் கொடுத்தவர் வழக்கு தொடர்ந்து விட்டார். அப்போதுதான் ரஜினிகாந்தின் சம்பந்தி என்று கஸ்தூரிராஜா சொல்ல இந்த பிரச்சனையில் ரஜினியையும் கடன் கொடுத்தவர் இழுத்து விட்டு விட்டார் .
தனுஷ் வாழ்க்கையே நாசாமாக்கிய ரஜினிகாந்த்
இதனால் கோபம் அடைந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கும் அந்த கடனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறிவிட்டார். இந்த விஷயத்தால் கஸ்தூரிராஜா கொஞ்சம் டென்ஷன் ஆகிவிட்டார். அன்றிலிருந்து ரஜினிகாந்தின் வீட்டில் நடக்கும் எந்த நிகழ்ச்சிக்கும் கஸ்தூரிராஜாவோ அவரது மனைவியோ கலந்து கொள்வதே இல்லை. இதனால் நாளுக்கு நாள் பிரச்சனை அதிகரிக்க இந்த பிரச்சினையால் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் சண்டை ஏற்பட்டு இருக்கிறது.

ஐஸ்வர்யா தன்னுடைய கணவரான தனுஷின் வீட்டை விட்டு பிரிந்து அப்பாவுக்காக ரஜினியுடன் வந்து வாழ ஆரம்பித்தார். இதனால் மேலும் பிரச்சனை வெடிக்க பின்னர் விவாகரத்து வரை சென்று போய்விட்டது. எனவே தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் பிரிவுக்கு மிக முக்கியமான காரணமே ஐஸ்வர்யாவின் அப்பாவான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனுஷின் அப்பாவான கஸ்தூரிராஜாவும் தான் இவர்களின் விவாகரத்துக்கு காரணம் என பயில்வான் ரங்கநாதன் கூறி அதிர வைத்திருக்கிறார்.