இரத்தம் தெறிக்க வெளிவந்த டீசர்
2023 ஆம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “ஜெயிலர்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் குவித்திருந்த நிலையில் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. “ஜெயிலர் 2” திரைப்படத்தின் அட்டகாசமான அறிவிப்பு டீசர் கடந்த மாதம் வெளிவந்தது. இரத்தம் தெறிக்க தெறிக்க வெளிவந்த இந்த டீசரின் மூலம் “ஜெயிலர் 2” திரைப்படம் ஒரு வெறித்தனமான ஆக்சன் திரைப்படமாக அமையவுள்ளதாக தெரிய வந்தது.

அதிரடி அறிவிப்பு
இந்த நிலையில் “ஜெயிலர் 2” திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது “X” தளத்தில் இத்திரைப்படத்தை குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியிட்டுள்ளது. அதாவது “ஜெயிலர் 2” திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்படவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர்.