டாப் நடிகராக இருந்தாலும் டூப் உண்டு
எந்த டாப் நடிகராக இருந்தாலும் சில ஆக்சன் காட்சிகளில் டூப் இல்லாமல் நடிக்க முடியாது. இது அந்த சம்பந்தப்பட்ட நடிகரின் பாதுகாப்பிற்காக பின்பற்றப்படும் ஒன்று. இதற்கு ரஜினிகாந்தும் விதிவிலக்கல்ல. அந்த வகையில் ரஜினியின் டூப்பை வைத்து ஒரு முக்கிய காட்சியை படம்பிடித்த நிகழ்வை குறித்து இப்போது பார்க்கலாம்.

குதிரையா? அய்யய்யோ!
1987 ஆம் ஆண்டு மனோ பாலா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் “ஊர் காவலன்”. இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் குதிரையில் பயணித்தபடியே சண்டை போடுவது போல ஒரு காட்சி படமாக்கப்பட இருந்ததாம். அப்போது ரஜினிகாந்த் “எனது முந்தைய படத்தில் இப்படித்தான் ஒரு குதிரை காட்சி இருந்தது. அந்த படப்பிடிப்பில் குதிரை என்னை கீழே தள்ளிவிட்டுவிட்டது. ஆதலால் எனக்கு குதிரை என்றாலே பயம்” என்று கூறிவிட்டாராம்.

இதன் காரணமாக வேறு வழி இல்லாமல் கிட்டத்தட்ட 11 நாட்கள் ரஜினிகாந்த் போலவே ஒரு டூப்பை பயன்படுத்தி அந்த காட்சியை படமாக்கினார்களாம்.