நிரந்தர சூப்பர் ஸ்டார்
1975 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் அறிமுகமான “அபூர்வ ராகங்கள்” திரைப்படம் வெளிவந்து இந்த வருடத்துடன் 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. இவ்வாறு ரஜினிகாந்த் தமிழ் சினிமா உலகிற்குள் நுழைந்து மிகப்பெரிய சாதனைகளை புரிந்து 50 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் “ரஜினி 50” பாராட்டு விழாவிற்கான ஏற்பாடுகளுக்கு தயாரிப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்ய திட்டமிட்டிருந்ததாம்.

7 நாட்கள் 7 திரைப்படங்கள்
அதாவது கிட்டத்தட்ட 7 நாட்கள் ரஜினி நடித்து மிகப் புகழ்பெற்ற 7 திரைப்படங்களை ஒவ்வொரு நாளும் திரையிடவும் அந்த திரைப்படங்களின் இயக்குனர்களை அழைத்து உரையாடல் நடத்தவும் தயாரிப்பாளர் சங்கம் திட்டமிட்டிருந்ததாம்.
எனக்கு எதுக்கு பாராட்டு விழா?

இந்த நிலையில் இதற்கான அனுமதியை பெற ரஜினிகாந்தை நேரில் சென்று சந்தித்தார்களாம். அதற்கு ரஜினிகாந்த், “எனக்கு எதற்கு பாராட்டு விழா?” என்று கூறி தனக்கு இதில்லெல்லாம் ஈடுபாடு இல்லை என்று நிராகரித்துவிட்டாராம். இதனால் ரஜினி ரசிகர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.