சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்:
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர அந்தஸ்திலும் சூப்பர் ஸ்டார் என்ற இடத்திலும் இருப்பவர்தான் நடிகர் ரஜினிகாந்த். இவரது திரைப்படம் வெளிவரும் நாளில் கோடிக்கணக்கான ரசிகர்கள் சென்று திரைப்படங்களை பார்த்து அதை திருவிழா போல கொண்டாடுவார்கள்.

இப்போது வரை ரஜினிகாந்த்திற்கு இருக்கும் மவுஸ் இன்னும் குறையவே இல்லை. இப்படி இருக்கும் சமயத்தில் ரஜினிகாந்தை குறித்து பிரபல youtube சேனலுக்கு கவிதாலயா கிருஷ்ணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரை மோசமாக திட்டி பேசி இருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் பெரும் அதிருப்தி ஏற்படுத்தியிருக்கிறது.
ரஜினி ஒரு காமெடி பீஸ் :
இது குறித்து youtube சேனலுக்கு அவர் கொடுத்த பேட்டியில்…. கமல் போல ஒரு நடிகனை இந்த சினிமா பார்க்கவே முடியாது. கமல்ஹாசனுக்கு கர்வம் அதிகமாக இருப்பதாக பலர் கூறுகிறார்கள். இருக்க தானே செய்யும்…. ஒருத்தரை நம்பி 100 கோடி போட்டு படம் எடுக்கிறார் என்றால் அவருக்கு கர்வம் இருக்காதா? அதை நான் கர்வம் என்று சொல்ல மாட்டேன்.

அவரது திறமை மீது அவர் வைத்திருக்கும் அதீத நம்பிக்கை என்று தான் சொல்வேன். ஆனால், ரஜினி அப்படி கிடையாது. தன் மீது நம்பிக்கை இல்லாத நபர் தான் நடிகர் ரஜினிகாந்த். அவர் ஒரு காமெடி பீஸ் அவர் சம்பாதித்த இந்த சினிமா துறைக்காக என்ன செய்திருக்கிறார்? அவரை வளர்த்து விட்ட இந்த மக்களுக்காக என்ன செய்திருக்கிறார்? அவர் எதுக்குமே மெனக்கட்டது கிடையாது.
கமல் ஹாசன் தான் சிறந்த நடிகன்
ரஜினியின் ஷூட்டிங்கில் இருந்து பலமுறை பார்க்கும்போது அவர் ஸ்டார் ஆகுவார் என்று தெரியும்.ஆனால் இவ்வளவு பெரிய ஸ்டார் ஆகுவார் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. அவ்வளவு ஏன்? பாலச்சந்தர் கூட நினைத்திருக்க மாட்டார். ஏனென்றால் ரஜினியின் கதாபாத்திரங்கள் எதுவும் தாக்கத்தை ஏற்படுத்தியது இல்லை. ஆனால் சிவாஜி கணேசன் கமல்ஹாசன் போன்ற நடிகர்களின் நடிப்பு எனக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

பாட்ஷா படத்தில் யார் நடித்திருந்தாலும் அந்த திரைப்படம் நன்றாக ஓடி இருக்கும். காரணம் அந்த படத்தின் கதை அவ்வளவு வலுவானது. ஆனால், ரஜினிகாந்த் நடித்ததால் படம் சில்வர் ஜூப்ளி திரைப்படமாக வெற்றி பெற்று அவரது அந்தஸ்தையே உயர்த்தி விட்டது. ஆனால் கமல் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற அவ்வை சண்முகி திரைப்படத்தில் கமலைத் தவிர வேறு யாராலும் நடித்திருக்க முடியாது.
முடிவு எடுக்க தெரியாத முட்டாள்:

அந்த அளவுக்கு அவர் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி காட்டியிருப்பார். ஒன்று செய்ய வேண்டும் என கமல்ஹாசன் முடிவு எடுத்து விட்டால் தைரியமாக அந்த முடிவில் இறங்கி வேலை செய்வார். ஆனால், ரஜினிகாந்த் அப்படி கிடையாது. அவர் ஒரு பயந்தாங்கோலி…. ஒரு ஷாட் எடுக்க வச்சாலே சாட் ஓகேவா ?ஷார்ட் ஓகேவா? என்று பலமுறை கேட்டுக்கொண்டே இருப்பார். அந்த அளவிற்கு முடிவெடுக்க தெரியாத முட்டாள் ரஜினி என கவிதாலயா கிருஷ்ணன் கூறியுள்ளார்.