ரஜினி பக்தர்கள்
சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு வலம் வரும் ரஜினிகாந்த் ரசிகர்களை ரஜினி ரசிகர்கள் என்று கூறுவதை விட ரஜினி பக்தர்கள் என்று கூறுவதுதான் சிறந்த ஒன்றாக இருக்கும். அந்தளவுக்கு தனது தலைவரை எந்த ஒரு தருணத்திலும் விட்டுக்கொடுக்காத மனப்பாங்கு உடையவர்கள் அவர்கள். இந்த நிலையில் பிரபல மூத்த நடிகை வடிவுக்கரசி தனது பேட்டி ஒன்றில் ரஜினிகாந்த் ரசிகர்கள் செய்த செயலை குறித்த சம்பவம் ஒன்றை பகிர்ந்துகொண்டுள்ளார்.

ரயிலை மறித்த ரசிகர்கள்
1997 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த “அருணாச்சலம்” திரைப்படத்தில் வடிவுக்கரசி கதாபாத்திரம் ரஜினிகாந்தை பார்த்து “வெளிய போடா அனாதை நாயே” என்று ஒரு வசனதை கூறுவார். இந்த நிலையில் இத்திரைப்படம் வெளிவந்த பிறகு ஒரு நாள் வடிவுக்கரசி வெளியூருக்கு செல்ல ரயிலில் ஏறியபோது ரஜினி ரசிகர்கள் ரயிலை மறித்துள்ளனர்.

“வடிவுக்கரசியை வெளியில் இறங்கி வரச்சொல்லுங்கள்” என கூச்சலிட்டுள்ளனர். வடிவுக்கரசி ரயிலை விட்டு வெளியேறியவுடன் அங்கிருந்தவர்கள், “எவ்வளவு தைரியம் இருந்தா எங்க தலைவரை பார்த்து அனாதை நாயே என்று சொல்லுவ, உடனே மன்னிப்பு கேளு” என்று அடாவடி செய்திருக்கிறார்கள். வடிவுக்கரசியும் வேறு வழி இல்லாமல் மன்னிப்பும் கேட்டுள்ளார். அதன் பிறகுதான் ரயில் கிளம்பியதாம்.