கூட்ட நெரிசலில் உயிரிழந்த பெண்
“புஷ்பா 2” திரைப்படம் கடந்த 5 ஆம் தேதி வெளியான நிலையில் அதற்கு முந்தைய நாள் இரவு ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கத்தில் பிரீமியர் ஷோ திரையிடப்பட்டது. அப்போது அல்லு அர்ஜூன் திரையிடலில் கலந்துகொண்டார். அவரை பார்ப்பதற்காக முந்தியடித்து வந்த கூட்டத்தால் நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்த நிலையில் அவரது 9 வயது மகன் ஸ்ரீதேஜ் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பரிதாபகரமான நிலை
இந்த நிலையில் ஸ்ரீதேஜ்ஜின் மூளையில் சேதாரம் ஏற்பட்டுள்ளதாக தற்போது ஒரு செய்தி வெளிவந்துள்ளது. ஸ்ரீதேஜ் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது இந்த அதிர்ச்சி செய்தி கிடைத்துள்ளது. இது குறித்து சுகாதார செயலாளர் டாக்டர் கிரிஷ்டினா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “ஸ்ரீதேஜின் உடல்நிலையை மிகவும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். விரைவில் ஸ்ரீதேஜ் குணமடைவார்” என நம்பிக்கை கூறியுள்ளனர்.