மாபெரும் வெற்றி
அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளிவந்த “புஷ்பா 2” திரைப்படம் ரூ.2000 கோடி வசூலை நெருங்கியுள்ளது. இந்திய சினிமா வரலாற்றில் ஒரு மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்துள்ளது “புஷ்பா 2”. அல்லு அர்ஜூனின் மாஸ் ஆன நடிப்பும் படத்தில் இடம்பெற்ற சண்டை காட்சிகளும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. குறிப்பாக இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படியாக இருந்தது. ஒட்டு மொத்த இந்தியாவும் திரும்பிப்பார்க்கும்படியான ஒரு மகத்தான வெற்றியை “புஷ்பா 2” படக்குழுவினர் கொடுத்துள்ளனர்.

புஷ்பா 2 புதிய வெர்ஷன்!
“புஷ்பா 2” திரைப்படத்தின் நீளம் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் ஆகும். இந்த நிலையில் இத்திரைப்படத்தில் கூடுதலாக 20 நிமிட காட்சிகளை இணைத்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். “புஷ்பா 2” திரைப்படத்தின் இந்த புதிய வெர்ஷன் ஜனவரி 11 ஆம் தேதி முதல் திரையிடப்படுகிறது.
