அல்லு அர்ஜுன்:
தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தை விஜய் எப்படி தக்கவைத்துக் கொண்டிருக்கிறாரோ அதே மாதிரி தான் தெலுங்கு சினிமாவில் அல்லு அர்ஜுன் பிரபல நடிகராகவும் நம்பர் ஒன் இடத்திலும் இருந்து வருகிறார். நடனம் நடிப்பு எல்லாவற்றிலும் ரசிகர்களின் மனம் கவர்ந்த அல்லு அர்ஜுனுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறார்கள்.

இவரது நடிப்பில் வெளிவந்த புஷ்பா படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பான் இந்தியா நடிகராக பேசப்பட்டு வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டுக்கான சுகுமார் மற்றும் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாக்கி வெளிவந்த இந்த திரைப்படம் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருந்து.
புஷ்பா 2:
மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தில் பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா ,சுனில் அனுசியா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். மேலும் ஒரே ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்ட நடிகை சமந்தா மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.

அந்த பாடலும் செம ஹிட் அடித்தது. இப்படியாக முதல் படத்தின் முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. வருகிற டிசம்பர் ஐந்தாம் தேதி புஷ்பா 2 திரைப்படம் வெளியாக இருக்கிறது.
புஷ்பா 2 படத்தின் முதல் விமர்சனம்:
இந்த நிலையில் இப்படத்திற்காக மிகுந்த எதிர்பார்ப்போடு ரசிகர்கள் காத்திருக்கும் சமயத்தில் இந்த படத்தின் முதல் விமர்சனம் தற்போது இணையத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது.

அதாவது இந்திய சினிமாவின் மிகப்பெரிய பிளாக் மாஸ்டர் ஹிட் திரைப்படம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குனர் சுகுமார் இருவரின் உழைப்பிற்கும் பாராட்டுகளை இந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார்கள். ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் உருவாகிய இந்த திரைப்படம் நிச்சயம் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என முதல் விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.