மாபெறும் வெற்றி
அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 5 ஆம் தேதி வெளியான “புஷ்பா 2” திரைப்படம் வேற லெவல் ஹிட் அடித்துள்ளது. “புஷ்பா” முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் ரசிகர்களை அதிகளவு ஈர்த்துள்ளது. வெளியான 15 நாட்களிலேயே உலகளவில் ரூ.1500 கோடி வசூல் ஆகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹிந்தியில் செய்த சாதனை
இந்த நிலையில் “புஷ்பா 2” திரைப்படம் பாலிவுட்டில் மிகப்பெரிய சாதனையை செய்துள்ளது. அதாவது ஹிந்தியில் மட்டுமே வெளியான 15 நாட்களில் ரூ.700 கோடி வசூலை நெருங்கியுள்ளதாம். எந்த ஒரு நேரடி ஹிந்தி திரைப்படம் கூட இவ்வளவு வேகத்தில் இவ்வளவு அதிகமான வசூலை பெற்றது இல்லை. ஆனால் ஹிந்திக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான “புஷ்பா 2” திரைப்படம் இவ்வளவு குறுகிய நாட்களில் ரூ.700 கோடியை நெருங்கியுள்ளதாக வெளியான தகவல் பாலிவுட் சினிமாத்துறையினரை வாயடைக்கச் செய்துள்ளது.