வேற லெவல் வெற்றி…
அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி இந்திய சினிமா ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் “புஷ்பா 2”. அல்லு அர்ஜூனின் மாஸ் நடிப்பும் படத்தில் இடம்பெற்ற பிரம்மாண்ட ஆக்சன் காட்சிகளும் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்திழுத்தன. தென்னிந்தியாவில் மட்டுமல்லாது இந்திய அளவிலும் இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அதிரி புதிரி சாதனை
இந்த நிலையில் “புஷ்பா 2” திரைப்படத்தின் வசூல் குறித்து ஒரு அசத்தலான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படம் உலகளவில் ரூ.1871 கோடிகளை அள்ளியுள்ளது. வெளியான இரண்டு மாதங்களில் உலக அளவில் ஒரு இந்திய சினிமா 1800 கோடிகளுக்கு மேல் வசூலாவது இதுதான் முதல்முறை எனவும் கூறப்படுகிறது.
