இசையின் ராஜா…
தமிழ் சினிமாவின் இசை உலகின் ராஜாவாக வலம் வரும் இளையராஜா தற்போது வரை 1000க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இப்போதும் அவரது இசை தற்கால தலைமுறையினரும் ரசிக்கும்படியாக இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் தனது வீடியோ ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், இளையராஜாவின் சாதனைகள் குறித்து தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

இந்தளவுக்கு செய்வார்னு நான் எதிர்பார்க்கலை…

“இளையராஜா அறிமுகமான காலகட்டத்தில் சிம்பொனியில் இந்தளவுக்கு சாதனை படைப்பார் என அப்போது எனக்கு தெரியாது. ஆனால் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இசையமைப்பாளராக அவர் உயர்வார் என்று மட்டும் அன்றைக்கே என்னால் உணர முடிந்தது என்பதுதான் உண்மை” என்று தனது வீடியோவில் பகிர்ந்துள்ளார் சித்ரா லட்சுமணன்.