ஒல்லியான தோற்றத்தில் சிவாஜி கணேசன்!
நடிகர் திலகம் என்று போற்றப்படும் சிவாஜி கணேசன், 1952 ஆம் ஆண்டு “பராசக்தி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இத்திரைப்படத்தில் ஒப்பந்தமாவதற்கு முன்பு சிவாஜி கணேசன் மிகவும் ஒல்லியாக இருந்தாராம். அதனை பார்த்த ஏவி மெய்யப்ப செட்டியார் “இவனை எப்படி நடிக்க வைக்கிறது? பையன் ரொம்ப ஒல்லியா இருக்கானே” என்று வேறு ஓரு நடிகரை ஒப்பந்தம் செய்யலாம் என சிந்தித்தாராம். ஆனால் “பராசக்தி” திரைப்படத்தை தயாரித்த பெருமாள் முதலியார், “இந்த பையன் தான் நடிக்க வேண்டும்” என்ற முடிவில் இருந்தாராம்.

பெருமாள் முதலியார் செய்த காரியம்!
இதனை தொடர்ந்து சிவாஜியின் உடல் எடையை அதிகரிக்க, பெருமாள் முதலியார் ஒரு உதவியாளரை நியமித்து சிவாஜி கணேசனை ஊர் ஊராக அழைத்துச் சென்று வித விதமாக சாப்பாடு வாங்கிக்கொடுக்கச் சொன்னாராம். அதன் படி அந்த உதவியாளர் சிவாஜி கணேசனை ஊர் ஊராக கூட்டிச் சென்று வித விதமாக சாப்பாடு வாங்கிக்கொடுத்தாராம். கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கழித்து சிவாஜி கணேசனின் உடல் எடை நன்றாக ஏறியிருந்ததாம். அதன் பிறகுதான் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாம்.