நஷ்டத்தை கொடுத்த ஷங்கர்
தெலுங்கில் இயக்குனர் ஷங்கர் இயக்கி ராம் சரண் நடிப்பில் வெளிவந்த “கேம் சேஞ்சர்” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் சுமாரான வரவேற்பையே பெற்றது. இத்திரைப்படத்தை தயாரித்தவர் தில் ராஜூ. இத்திரைப்படத்தை தயாரிக்க ஆன பொருட்செலவு ரூ.400 கோடி ஆகும். ஆனால் இத்திரைப்படத்திற்கு கிடைத்த சுமாரான வரவேற்பால் தயாரிப்பாளருக்கு ரூ.200 கோடி நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவித்தன.

விபரீத முடிவு

தயாரிப்பாளர் தில் ராஜூ வெங்கடேஷை வைத்து “சங்கராந்திக்கி வஸ்துனம்” என்ற பெயரில் ரூ.50 கோடி பொருட்செலவில் கம்மியான பட்ஜெட்டில் ஒரு திரைப்படத்தை உருவாக்கினார். இத்திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்ற நிலையில் இத்திரைப்படத்தின் மூலம் தில் ராஜூவுக்கு ரூ.150 கோடி லாபம் கிடைத்துள்ளதாம். இந்த நிலையில் இனி பெரிய பட்ஜெட் திரைப்படங்களையே தயாரிக்கக்கூடாது என்ற முடிவுக்கு தில் ராஜூ வந்துவிட்டாராம்.