அதிக சம்பளம் வேணும்…
சிலம்பரசன் தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக வலம் வந்தாலும் சமீப காலமாக “மாநாடு” திரைப்படம் நீங்கலாக அவர் நடித்த எந்த திரைப்படமும் மிகப் பெரிய வெற்றியை பெறவில்லை. எனினும் சிலம்பரசன் தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோருக்கு கொடுக்கப்படும் சம்பளத்திற்கு நிகரான சம்பளத் தொகையை தனக்கு கொடுக்க வேண்டும் என தயாரிப்பாளர்களிடம் கண்டிஷன் போடுவதாக ஒரு தகவல் வெளிவந்தது.

சிம்பு கண்டிப்பா இதை பண்ணியே ஆகனும்…

இந்த நிலையில் இத்தகவலை குறித்து கருத்து தெரிவித்த பிரபல தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன், “சிவகார்த்திகேயன், தனுஷ் ஆகியோர் வாங்குகின்ற சம்பளத்திற்கு நிகரான சம்பளத்தை தனக்கு தர வேண்டும் என்று கேட்பதற்கு சிம்புவிற்கு எல்லா உரிமையும் இருக்கிறது. ஆனால் அப்படிப்பட்ட சம்பளத்தை சிம்புவிற்கு தயாரிப்பாளர்கள் தர வேண்டும் என்றால் ஒரு வெற்றி படத்தை கொடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.