ராசியில்லாத நடிகை
தொலைக்காட்சியில் இருந்து சினிமாவிற்குள் ஹீரோயினாக நுழைந்த பிரியா பவானி ஷங்கரை சமீப காலமாக ராசியில்லாத நடிகை என்று பலரும் குறை சொல்லி வந்தனர். அவர் நடித்தாலே அத்திரைப்படங்கள் ஓடாது என்று அவர் மேல் காழ்ப்புணர்ச்சியோடு வன்மத்தை கக்கினார்கள் சிலர். இந்த நிலையில் சமீபத்தில் தனது வீடியோ ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பிரியா பவானி ஷங்கர் குறித்த தனது கவலையை பகிர்ந்துகொண்டார்.

எனக்கு ஆச்சரியத்தை தருகிறது…
“பிரியா பவானி ஷங்கர் தெலுங்கில் ஒரு திரைப்படத்தை நடித்துக்கொண்டிருக்கிறார். தமிழில் அவர் எந்த திரைப்படத்திலும் நடிப்பதாக தெரியவில்லை” என கூறிய அவர்,
“பிரியா பவானி ஷங்கருக்கு வாய்ப்பில்லாதது எனக்கு நிஜமாகவே ஆச்சரியத்தை தருகிறது. பிரியா பவானி ஷங்கர் ஒரு நல்ல நடிகை. அவர் திரைப்படங்கள் சரியாக ஓடாத காலகட்டத்தில் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் வந்தன. சமீபத்தில் அவர் நடித்த ஓரிரண்டு திரைப்படங்கள் நன்றாகவே ஓடின. அந்த வெற்றிப்படங்களுக்கு பின்னாலும் வாய்ப்புகள் குறைந்தது எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது” எனவும் அவர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.