நடிகை பிரியா பவானி சங்கர்:
செய்தி வாசிப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கி பிறகு ஹீரோயின் ஆக திரைப்படங்களில் நடித்து மிருக குறுகிய காலத்திலேயே பல வெற்றி திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்ததன் மூலமாக பிரபலமான ஹீரோயினாக இடம் பிடித்திருப்பவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர்.

இவரது நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் தான் ஜீப்ரா. இந்த திரைப்படத்தில் சத்யராஜ், ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி அன்மையில் நடைபெற்றது.
ப்ரோமோஷனுக்கு வராத பிரியா பவானி ஷங்கர்:
இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் பிரியா பவானி சங்கர் வராதது குறித்து படத்தின் தயாரிப்பாளர் பேசியுள்ளது பெரும் சர்ச்சைக்குரியதாக பார்க்கப்படுகிறது. அதாவது அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் ஹீரோயின்களை படத்தில் கமிட் செய்யும்போதே படத்தின் ப்ரோமோஷன்களுக்கு வருவீர்களா? இல்லையா? என்பதை தெளிவாக கேட்டு அக்ரிமெண்ட் போட்டு வாங்கிக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் வெளிநாட்டில் இருக்கும் ப்ரியா பவானி சங்கரை பிரமோஷனுக்கு அழைத்தால் பல லட்சம் செலவாகும் என்றும் அவருக்கும் அவரது குழுவுக்கும் விமான டிக்கெட்டுகள் உள்ளிட ஏகப்பட்ட செலவுகள் இருப்பதாக கூறி அதிர வைத்தார் .
சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் இந்த வயதிலும் தன்னுடைய படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வருகிறார். அதே லேடி சூப்பர் ஸ்டார் ஆன நயன்தாரா தனது படங்களை தவிர வேற எந்த தயாரிப்பு நிறுவனங்களில் தான் நடிக்கும் படங்களின் ப்ரோமோஷனுக்கும் செல்வதில்லை.
கோடி கோடியா பணம் கொடு…
தற்போது அதே ஸ்டைல் பிரியா பவானி சங்கர் கையில் எடுத்திருக்கிறாரா? என்ற ஒரு கேள்வி எழுந்திருக்கிறது. ஜீப்ரா திரைப்படம் வெளிவந்த முதல் வாரத்தில் வெறும் நான்கு லட்சம் மட்டுமே வசூலித்தது. ஆனால் படத்தின் பாசிட்டிவ் விமர்சனங்களை அடுத்து அடுத்த நாளே ரூ. 55 லட்சம் வசூலிட்டி சாதனை படைத்தது.

எனவே விரைவில் ஒரு கோடி ரூபாய் வசூல் அந்த திரைப்படம் அடையும். இப்படியான நேரத்தில் மீண்டும் அந்த படத்திற்கு வசூல் கிடைக்கும் என எண்ணி பிரியா பாவானி சங்கரை அழைத்துள்ளனர். ஆனால், அவர் வர மறுத்திருக்கிறார். வெளிநாட்டில் இருக்கும் பிரியா பவானி சங்கரை அழைத்தால் ரூ .20 முதல் ரூ. 25 வரை செலவாகும் அந்த பணத்தை நான் பிரமோஷன்காக பயன்படுத்திக் கொள்வது பெட்டர் என தயாரிப்பாளர் கூறியது பெரும் சர்ச்சைக்குரியதாக பார்க்கப்பட்டு வருகிறது.