பிரேம்ஜி அமரன்:
கங்கை அமரனின் இளைய மகன் பிரேம்ஜி அமரன் திருமணமே செய்து கொள்ள மாட்டார். கடைசிவரை முரட்டு சிங்கிளாக தான் இருக்கப் போகிறார் என எல்லாரும் பேசி வந்த சமயத்தில் திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்து என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு எல்லோருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தார் .

சமூக வலைதளம் மூலமாக ஏற்பட்ட பழக்கம் பின்னாளில் நட்பாக மாறி அதன் பின் காதலாக உருமாறி இருக்கிறது. இரண்டு வருடங்களாக காதலித்து பின்னர் பெற்றோர்கள் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள் .
காதல் திருமணம்:
இந்த நிலையில் சமீபத்திய பேட்டியில் இந்து இது குறித்து பேசி இருக்கிறார். அதாவது கல்யாணம் என்று வரும்போது எங்க வீட்ல ரொம்பவே பிரஷர் இருந்துச்சு. சினிமா ஃபேமிலி வேண்டாம் அப்படின்னு சொல்லிட்டாங்க.

காதலிச்சா ஒரு குடும்பத்தில் என்னென்ன பிராப்ளம்ஸ் இருக்குமோ அது எல்லாமே எங்களுக்கும் நடந்துச்சு.அவருக்கு வயசு ரொம்ப அதிகம் அது ஒரு காரணம் சொன்னாங்க. ஆனால், நான் இவரை தான் கல்யாணம் பண்ணிப்பேன் என்று உறுதியாக இருந்தேன். நான் உறுதியாக இருந்ததால் வேறு வழி இல்லாமல் எங்க வீட்டில் ஒத்துக் கொண்டார்கள்.
ஆனால் இப்போ எங்க குடும்பத்தில் அனைவருக்கும் பிரேம்ஜியை பிடித்து விட்டது என இந்து கூறியுள்ளார். அவரின் இந்த பேட்டியை பார்த்து ரசிகர்கள் எல்லோரும் நீங்கள் மிகச் சிறந்த ஜோடி பிரேம்ஜிக்கு ஏத்த பெண் நீங்கள் தான். பல வருடங்கள் அவர் காத்திருந்ததற்கு நல்ல பலனாக நீங்கள் கிடைத்திருக்கிறீர்கள் என வாழ்த்தி வருகிறார்கள்.