மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார்
1950களில் இருந்து 1980கள் வரை 700 திரைப்படங்களுக்கும் மேல் ஹீரோவாக நடித்து சாதனை புரிந்தவர் மலையாள நடிகரான பிரேம் நசீர். 1952 ஆம் ஆண்டு “மருமகள்” என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் இவர். அதன் பின் பற்பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். இவர் தமிழில் 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

லெஜண்ட் நடிகை…
மலையாள சினிமாவில் பிரேம் நசீருக்கு இணையான புகழ் பெற்ற நடிகையாக திகழ்ந்தவர் ஷீலா. இவர் 400 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மலையாளம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, உருது போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் இவர்கள் இருவரை குறித்து ஒரு சுவாரஸ்ய தகவல் ஒன்று இருக்கிறது.

கின்ன்ஸ் சாதனை
அதாவது பிரேம் நசீரும் ஷீலாவும் இணைந்து கிட்டத்தட்ட 140 திரைப்படங்களுக்கு மேல் ஜோடியாக நடித்துள்ளனர். இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.