வேற லெவல் ஹிட்
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த 21 ஆம் தேதி வெளியான “டிராகன்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. பிரதீப் ரங்கநாதனின் நடிப்பும் அஸ்வத் மாரிமுத்துவின் திரைக்கதையும் இத்திரைப்படத்தை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்றுள்ளது. வெளியாகி மூன்றே நாட்களில் ரூ.50 கோடி வசூலை உலகம் முழுவதிலும் பெற்றுள்ளது திரைத்துறையினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரசாந்த் நீலுக்கு வந்த சிக்கல்…
“கேஜிஎஃப்”, “சலார்” போன்ற திரைப்படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் தற்போது ஜூனியர் என் டி ஆரை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்திற்கு “டிராகன்” என்று பெயர் வைத்திருக்கிறாராம்.

பிரதீப் ரங்கநாதனின் “டிராகன்” திரைப்படம் ஆந்திராவிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் பிரசாந்த் நீல் தனது திரைப்படத்தின் டைட்டிலை மாற்றுவாரா? இல்லை “டிராகன்” என்ற பெயரிலேயே வெளியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாம்.