வளர்ந்து வரும் நடிகர்
கோலிவுட்டின் வளர்ந்து வரும் நடிகராக பிரதீப் ரங்கநாதன் திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான “டிராகன்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத நடிகராக அவர் உருமாறியுள்ளார். இந்த நிலையில் தற்போது அவர் நடிக்கவிருக்கும் நான்காவது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இவர்தான் இயக்குனரா?
அதாவது பிரதீப் ரங்கநாதனின் நான்காவது திரைப்படத்தை சுதா கொங்கராவின் உதவி இயக்குனரான கார்த்தீஸ்வரன் என்பவர் இயக்கவுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இத்திரைப்படத்தை தயாரிக்கும் நிலையில் சாய் அப்யங்கர் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்கவுள்ளது. இதற்கான அறிவிப்பு போஸ்டர் தற்போது வெளிவந்துள்ளது.

“டிராகன்” திரைப்படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் “LIK” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள நிலையில் நயன்தாராவும் லலித்குமாரும் இணைந்து இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.