இளைஞர்களின் நாயகன்
“கோமாளி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் இயக்குனராக அறிமுகமானாலும் “லவ் டூடே” திரைப்படத்தின் மூலம் இளைஞர்களை கவர்ந்த ஒரு நடிகராக வலம் வருகிறார் பிரதீப் ரங்கநாதன். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் “LIK” திரைப்படத்தில் நடித்து வரும் பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் “டிராகன்” திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இதனையடுத்து பிரதீப் ரங்கநாதனை பல இயக்குனர்கள் வந்து சந்தித்த வண்ணம் இருக்கிறார்களாம். இந்த நிலையில் பிரதீப் ரங்கநாதனின் சம்பளம் குறித்த ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இவ்வளவு கோடியா?
பிரதீப் ரங்கநாதன் இயக்கிய “லவ் டூடே” திரைப்படம் ரூ.100 கோடியை வசூல் செய்துள்ள செய்தி பலரும் அறிந்ததே. இந்த நிலையில் “டிராகன்”, “LIK” போன்ற திரைப்படங்களில் நடித்து வரும் பிரதீப் ரங்கநாதன் இனி வரும் திரைப்படங்களில் நடிக்க ரூ.18 கோடி சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது. இந்த செய்தி திரையுலகைச் சேர்ந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.